இனி பேடிஎம் ஆண்ட்ராய்டு செயலி முலம் உணவு ஆர்டர் செய்யலாம்ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய பல்வேறு செயலிகள் வந்துவிட்டது. அதே வரிசையில், பேடிஎம் நிறுவனமானது ஜொமேட்டோ உடன் இணைந்து இந்தப் புதிய வசதியை, அதன் ஆண்ட்ராய்டு செயலியில் அறிமுகப்படுத்தியள்ளது.

அறிமுக சலுகையாக உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாய் கேஷ்பேக் சலுகையை அந்நிறுவனம் வழங்குகிறது.

முதற்கட்டமாக இந்த வசதியை, பேடிஎம் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு பயணாளர்க்கு மட்டுமே அளிக்கவுள்ளது மற்றும் இந்த சேவை முதலில் டெல்லியில் மட்டும் செயல்படுத்தபட உள்ளது.

பின்னர், பேடிஎம் நிறுவனமானது நாடு முழுவதும் இந்த புதிய சேவையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதே போல், ஜொமேட்டோ நிறுவனமும் கூடுதலாக 30 நகரங்களில் உணவு ஆர்டர் சேவையை விரிவு செய்ய இருக்கிறது.

மேலும், பேடிஎம் நிறுவனமானது இந்த மாதம் இறுதிக்குள் நாட்டில் உள்ள 100 நகரங்களைச் சேர்ந்த 80 ஆயிரம் உணவகங்களுடன் இணைந்து இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

பேடிஎம் நிறுவனமானது, அதன் ஆண்ட்ராய்டு செயலி மூலம் கொண்டு வந்த இந்த திட்டத்தை, அதன் மற்ற திட்டங்களை போல நாடு முழுவதும் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்பார்க்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here