சாம்சங் கேலக்ஸி M10, M20 விலை வெளியானதுசாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி M தொடரின் விலை விவரங்கள் அதிகாரப்பூர்வ வெளியீட்டுற்கு முன் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனமானது அதன் புதிய கேலக்ஸி M வரிசை கைப்பேசியை ஜனவரி 28 ம் தேதி இந்தியாவில் வெளியீடும் என எதிர்பார்க்கபடுகிறது. சாம்சங் எம் வரிசையில் கேலக்ஸி M10, M20, மற்றும் M30 ஆகியவை அடங்கும்.

சாம்சங் அதிகாரப்பூர்வ தளத்தில் ஜனவரி 28-ம் நடைபெறும் நேரடி வெளியீட்டு நிகழ்வில் சேர தயாராகுங்கள்.

கேலக்ஸி M10, M20, M30 விலை விவரங்கள்:

சாம்சங் M10 விலை INR 8,990 (தோராயமாக $ 127) லிருந்து தொடங்கும் அது போல கேலக்ஸி M20 விலை சுமார் 12,990 ரூபாயில் (தோராயமாக $ 183) தொடங்கும் என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது. கேலக்ஸி M30 விலை பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை (வதந்தி – சாம்சங் M30 விலை 15,990 – $ 225 ஏறக்குறைய). கேலக்ஸி M வரிசை ஸ்மார்ட்போன்கள் அமேசான் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

கேலக்ஸி M10 குறிப்புகள்:

சாம்சங் கேலக்ஸி M10 ஆனது 6.0 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி, 1520 x 720 (19:9, HD+) பிக்சல்கள் உடைய இன்பினிட்டி- V திரை கொண்டிருக்கிறது. மேலும், இது ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயக்க முறைமை, ஆக்டா-கோர் செயலி, எஸ்யனோஸ் (Exynos) 7870 சிப்செட், 3400mAh மின்கலம் மற்றும் 3 ஜிபி ரேம் / 32 ஜிபி உள் சேமிப்பு திறன் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. கேலக்ஸி M10 பின்புறத்தில் ஒரு 13MP கேமராவும், முன்புறத்தில் ஒரு 5MP கேமராவும் கொண்டிருக்கும்.

கேலக்ஸி M20 குறிப்புகள்:

சாம்சங் கேலக்ஸி M20 ஆனது 6.13 இன்ச், 2340 * 1080 (FHD+) பிக்சல்கள் உடைய இன்பினிட்டி- V திரை கொண்டிருக்கிறது. இந்த கைப்பேசியானது அண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயக்க முறைமை, ஒரு 5000mAh பெரிய மின்கலம், 1.5GHz ஆக்டா-கோர் செயலி, எஸ்யனோஸ் (Exynos) 7885 SoC சிப்செட், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு ஆகியவற்றையும் கொண்டுள்ளது. மேலும், இரட்டை பின்புற கேமரா 13MP + ? மற்றும் குறைந்தபட்சம் 5MP முன்புற கேமராவை எதிர்பார்க்கலாம்.

கேலக்ஸி M30 குறிப்புகள்:

கேலக்ஸி M30 இல் 6.38 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி FHD+ திரை உள்ளது. இதில் எஸ்யனோஸ் (Exynos) 7885 சிப்செட், ஒக்டா-கோர் செயலி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி ரோம் மற்றும் 5000mAh மின்கலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது எல்இடி பிளாஷ் வசதி கொண்ட இரட்டை பின்புற கேமரா மற்றும் ஒரு 16MP முன்புற கேமரா ஆகியவையும் கைபேசியில் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here