சோனி Xperia XA3, XA3 Ultra, L3- ப்ளூடூத் சான்றிதழை பெறுகின்றனசோனி, 25-பிப்ரவரி-2019 அன்று பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் MWC நிகழ்ச்சியில் அதன் Xperia XZ4, Xperia XA3, Xperia XA3 Ultra மற்றும் Xperia L3 ஆகிய மொபைல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இப்போது, சோனி Xperia XA3, XA3 Ultra மற்றும் L3 ஸ்மார்ட்போன்கள் ப்ளூடூத் சான்றிதழை பெற்றுள்ளது.

சோனி Xperia XA3, XA3 Ultra, L3- ப்ளூடூத் சான்றிதழை பெறுகின்றனப்ளூடூத் SIG சான்றிதழில், சோனி XA3 மொபைல் – மாதிரி எண் I4193 உடனும் , XA3 அல்ட்ரா மொபைல் – மாதிரி எண் I4293, I4213 உடனும், Xperia L3 மொபைல் – மாதிரி எண் I4113 உடனும் காணப்படுகிறது. பட்டியலின் படி, மூன்று ஸ்மார்ட்போன்களும் ப்ளூடூத் 5.0 ஆதரவுடன் செயல்படும் மற்றும் இந்த பட்டியல் சாதனங்களைப் பற்றிய அதிக விவரங்களை வெளிப்படுத்தவில்லை .

சோனி Xperia XA3, XA3 Ultra, L3 முக்கிய விவர குறிப்புகள் (வதந்தி):

சோனி எக்ஸ்பெரிய XA3 மொபைல் 5.9 அங்குல FHD+ திரையை 18: 9 (2160 * 1080) விகிதத்துடன் கொண்டிருக்கும். தொலைபேசி, Qualcomm snapdragon 660 சிப்செட், 4ஜிபி ரேம், 64 ஜிபி உள் சேமிப்பு ஆகியவற்றுடன் இயக்கப்படுகிறது. இதில் 3,600mAh மின்கலம் உள்ளது மற்றும் அண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் மூலம் இயக்கபடுகிறது. சாதனம் 23 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா XA3 அல்ட்ரா மொபைல் 6.5 அங்குல FHD+ திரையும், 18: 9 (2160 * 1080) விகிதமும் கொண்டது. இது Qualcomm snapdragon 660 சிப்செட், 6ஜிபி ரேம், 64 ஜிபி உள் சேமிப்பு ஆகியவற்றுடன் இயக்கப்படுகிறது. சாதனம் 13 மெகாபிக்சல் முன் கேமராவை கொண்டுள்ளது.

மேலும் படிக்கவும்:

சோனி எக்ஸ்பீரியா L3 மொபைல் 5.7 அங்குல திரையுடன் (18: 9) வரும் எனக் கூறப்படுகிறது. தொலைபேசியானது Snapdragon 660 சிப்செட் மற்றும் 3 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. சாதனம் 13 எம்.பி. + 5 எம்.பி. இரட்டை பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் கேமராவுடனும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here