மோட்டோ ஜி 7 ப்ளே கீக்பெஞ் வலைத்தளத்தில் காணப்பட்டதுமோட்டோரோலா நிறுவனமானது, மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பவர் மற்றும் மோட்டோ ஜி7 ப்ளே போன்ற மோட்டோ ஜி7 கைபேசி வரிசையில் வேலை செய்கிறது. இப்போது, மோட்டோ ஜி7 ப்ளே அதன் முக்கிய குறிப்புகளை வெளிப்படுத்தும் கீக்பெஞ் (GeekBench) தரப்படுத்தல் வலைத்தளத்தில் காணப்பட்டது.

மோட்டோரோலா நிறுவனமானது, முதலில் மோட்டோ ஜி7 வரிசை கைபேசிகளை MWC 2019 வழியாக பிரேசிலிய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மோட்டோ ஜி 7 ப்ளே கீக்பெஞ் வலைத்தளத்தில் காணப்பட்டதுகீக்பெஞ் (GeekBench) பட்டியல், கைபேசியானது 1173 புள்ளிகளை ஒற்றை மைய செயல்திறன் சோதனையிலும் மற்றும் 4090 புள்ளிகளை பல மைய செயல்திறன் சோதனையிலும் பெற்றுள்ளது என்று காட்டுகிறது.

பட்டியலின் படி, மோட்டோ ஜி 7 ப்ளே குவால்காம் MSM8953 (Snapdragon 625) செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும், கைபேசியானது 2 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் பட்டியலிடுகிறது. இந்த 2GB மாதிரியானது 16GB உள் சேமிப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் 3ஜிபி ரேம் உடன் மற்றொரு மாதிரியும் இருக்கும். தொலைபேசியானது அண்ட்ராய்டு v9.0 இயங்கு தளத்தில் இயங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here