மோட்டோ Z3 ஆண்ட்ராய்டு 9.0 பை மேம்படுத்தல் பெற தொடங்குகிறதுடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மோட்டோரோலா, மோட்டோ Z3 ஐ அறிமுகப்படுத்தியது. இப்போது, மோட்டோ Z3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை மேம்படுத்தல் பெற தொடங்கிறது. இந்த அறிவிப்பு ஒரு வாரம் அல்லது இரண்டு நாட்களுக்குள் மோட்டோ Z3 உரிமையாளர்களின் கைபேசியில் வரும்.

நீங்கள் புதுப்பிப்பு அறிவிப்பைப் பெறவில்லையெனில், அமைப்புகள் (செட்டிங்ஸ்) > தொலைபேசி பற்றி (அபோட் போன்) > கணினி புதுப்பிப்பு (சிஸ்டம் அப்டேட்) மெனுவைப் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் கைமுறையாக புதுப்பிப்பை சரிபார்க்கலாம்.

உங்கள் சாதனத்தில் புதுப்பிப்பு பதிவிறக்கப்பட்டவுடன், உங்கள் சாதனத்தை மீண்டும் துவக்க வேண்டும், அப்போது ஆ ண்ட்ராய்டு 9.0 பை மேம்படுத்தல் நிறுவப்படும். மேம்படுத்தல் 1GB க்கும் அதிகமான அளவு கொண்டிருக்கிறது, எனவே, Wi-Fi இணைப்பு வழியாக அதைப் பதிவிறக்க வேண்டும்.

மோட்டோரோலாவானது தனது பயனர்களுக்கு, மேம்படுத்தல் பதிவிறக்கும் போது குறைந்தபட்சம் 50% பேட்டரி இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. மேலும், மேம்படுத்தல் சாதனத்தில் ஜனவரி மாத பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டு வருகிறது.

அண்ட்ராய்டு பை மேம்படுத்தல் பல அம்சங்களை வழங்குகிறது, முக்கியமாக, மின்கலம், திரை பிரைட்னஸ், வழிநடத்துதல் சைகைகள், எளிமைப்படுத்தப்பட்ட ஒலி கட்டுப்பாடு, சீரமைக்கப்பட்ட பிளவு திரை (Spilt screen) மற்றும் மேம்பட்ட டிஎன்டி முறை. நீங்கள் இங்கே, இந்த இணைப்பை பார்ப்பதன் மூலம் ஆண்ட்ராய்டு 9.0 பை மேம்படுத்தல் அம்சங்களை பற்றி மேலும் அறிய முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here