விவோ Y89 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தபட்டதுவிவோ நிறுவனம், ஒரு புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் விவோ Y89 என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் (சீனா) பட்டியலிடப்பட்டுள்ளது, ஆனால் அது ஏற்கனவே Aliexpress இல் விற்பனைக்கு உள்ளது. இதன் விலை CNY 1,598 (சுமார் ரூ 16,700, டாலர் 235) ஆகும். கைபேசியானது அரோரா ஊதா மற்றும் பிளாக் கோல்ட் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்திய சந்தையில் விவோ Y89 ஐத் அறிமுகப்படுத்த ஏதேனும் திட்டம் உள்ளதா இல்லையா என்பது இப்போது தெரியவில்லை.

விவோ Y89 விவரக்குறிப்பு:

இந்த Y89 ஸ்மார்ட்போனது 6.26 அங்குல FHD+ 19: 9 (2280 x 1080 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது Adreno 506 ஜி.பீ.யு, 4 ஜிபி ரேமுடன் 2.2 GHz ஆக்டா-கோர் ஸ்னாப்ட்ராகன் 626 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 32 ஜிபி உள் நினைவகம் உள்ளது மற்றும் மைக்ரோ SD கார்டு மூலமாக 256 ஜிபி வரை நினைவகத்தை விரிவாக்க முடியும்.

கைபேசியானது அண்ட்ராய்டு 8.1 Oreo இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட FunTouch ஒஸ் 4.0 மூலம் இயங்கும் மற்றும் 2360mAh மின்கலம் உள்ளது.

இதில் 16MP + 2 MP இரட்டை பின்புற கேமரா LED ஃப்ளாஷ் அமைப்புடன் உள்ளது மற்றும் 16MP முன் கேமரா உள்ளது. பாதுகாப்பிற்காக, தொலைபேசியின் பின்புறதில் ஒரு கைரேகை சென்சார் மற்றும் முக அங்கீகார அம்சமும் உள்ளது.

கைபேசியானது 4G வோல்ட், WiFi 802.11 a/b/g/n, ப்ளூடூத் v4.2, ஜிபிஎஸ் ஆகியவற்றிற்க்கு ஆதரவு அளிக்கிறது. மேலும், தொலைபேசியானது 154.81 x 75.03 x 7.89 மிமீ அளவும் மற்றும் எடை 149.3 கிராமும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here