Google Pixel 3 Lite- புதிய காணொளி கசிந்ததுGoogle, அதன் புதிய ஸ்மார்ட்போன் Pixel 3 Lite விரைவில் அறிமுகப்படுத்துகிறது. இப்போது, அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னரே, Google Pixel 3 Lite கைபேசி (Hands-on) காணொளி கசிந்தது.

Google Pixel 3 Lite – காணொளி மூலம் கசிந்த முக்கிய விவர குறிப்புகள்:

இந்த காணொளியின் மூலம் பிக்சல் 3 லைட், அசல் பிக்சல் 3ஐ போலவே உள்ளது என நாம் அறிந்து கொள்ளலாம். கைபேசியின் பின்புறமானது பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜேக் உள்ளது. இதில் அடிப்படை அம்சமாக USB Type- C போர்ட், இரண்டு ஒலிப்பெட்டி கிரில், பின்புற கைரேகை சென்சார் மற்றும் ஒரு பின்புற கேமராவுடனும் வருகிறது.

Google Pixel 3 Lite- புதிய காணொளி கசிந்ததுகைபேசியானது 5.56 அங்குல FHD+ திரையை 18: 9 (2160 * 1080) விகிதத்துடனும் மற்றும் 434ppi பிக்சல் அடர்த்தியுடனும் இடம்பெறும் என மேலும் தெரிவித்துள்ளது. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 670 சிப்செட், Adreno 615 ஜி.பீ.யூ, 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு உடன் இணைந்து செயல்படும் மேலும் நீங்கள் சேமிப்பு விரிவுபடுத்தலாமா அல்லது இல்லையா என்பது பற்றிய தகவல் இல்லை. இதில் 2915mAh மின்கலம் உள்ளது மற்றும் அண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் மூலம் இயக்கபடுகிறது.

நிழற்படக் கருவி அம்சமாக, பிக்சல் 3 இல் பார்த்த அதே அமைப்பை லைட் வேரியண்ட் கொண்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இது 12.2 மெகாபிக்சல் பின்புற நிழற்படக் கருவியானது F / 1.8 துளை, 28 மிமீ அகலக் கோண லென்ஸ், 1.4-மைக்ரான் பிக்சல் அளவு மற்றும் OIS போன்ற அம்சங்களுடன் வருகிறது. முன், 8 மெகாபிக்சல் நிழற்படக் கருவி உள்ளது.

Pixel 3 Lite- காணொளி:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here